திருச்சி,மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பரஞ்சோதி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பரஞ்சோதி இன்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார். திருச்சி மாவட்ட எல்லையான சமயபுரம் டோல் பிளாசா அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் மண்ணச்சநல்லூர் ஜெயக்குமார், ஆதாளி, ஜெயக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அய்யம்பாளையம் ரமேஷ், ஏகாம்பரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.