5 தொகுதி இல்லாவிட்டால் தனித்துப் போட்டி: ஆர்.வி.பரதன்
5 தொகுதி தரும் கட்சியினருக்கு ஆதரவு - இல்லாவிட்டால் 40 தொகுதியில் எங்கள் சமூகத்தினர் தனித்துப் போட்டி - திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க இளைஞரணி தலைவர் R.V பரதன் பேட்டி.;
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக திருச்சி அருகே தனியார் மண்டபத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள முத்தரையர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க இளைஞர் அணி தலைவர் ஆர்.வி பரதன் பேசுகையில்,
தமிழகத்தில் இருக்கக்கூடிய மத்திய மாநில அரசியல் கட்சிகள் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் 29 பட்டப் பெயர்களில் வாழும் முத்தரையர் மக்களின் நலனை மேம்படுத்த முத்தரையர் நலவாரியம் அமைத்து அவர்கள் அனைவரையும் முத்தரையர் என்றே அழைக்க வேண்டும் என்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளை வழங்கும் கட்சியினருக்கு எங்கள் சமூகத்தினர் ஆதரவு அளிப்பார்கள் , அப்படி கொடுக்காத பட்சத்தில் எங்கள் சமூகத்தில் ஒரு கோடிக்கு மேல் தமிழகத்தில் இருக்கிறார்கள். இதனை வைத்து 40க்கும் மேற்பட்ட தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு முதல்வரை நியமனம் செய்வோம்" என்றார்.