வீட்டு சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி மரணம்

Update: 2021-01-02 08:15 GMT

திருச்சி சமயபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம்,சமயபுரம் அருகே மருதூர் ஊராட்சியில் உள்ள கவுண்டர் தெருவில் வசிப்பவர் கோவிந்தன் ( 64 ) கூலித் தொழிலாளி . இவரது மனைவி பாப்பு. இவர்களது ஒரே மகளுக்கு திருமணம் முடிந்து, கோவிந்தனும் அவரது மனைவி பாப்புவும் இவர்களுக்கு சொந்தமான குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருவரும் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 6 மணிஅளவில் மனைவி பாப்பு இயற்கை உபாதை கழிக்க சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் மண் சுவர் இடிந்து படுக்கையில் இருந்த அவரது கணவர் மீது கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.

பின்னர் அருகே இருந்த பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் இருந்த கோவிந்தனை மீட்டு எடுத்த போது உயிரிழந்த நிலையில் இருந்தார்.இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News