லால்குடி: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஊராட்சி தலைவர் பரிசு

லால்குடி அருகே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஊராட்சி தலைவர் பரிசு வழங்கினார்.

Update: 2021-09-19 11:09 GMT

லால்குடி அருகே மங்கம்மாள் புரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஊராட்சி தலைவர் பரிசு வழங்கினார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கம்மாள்புரம் ஊராட்சியில் கொரோனா நோயை தடுக்கும் பொருட்டு மெகா தடுப்பூசி முகாம் நடந்தது இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பட்டுப்புடவை செல்போன் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்படும் என ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் அன்பில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கோபிநாதன் மற்றும் மருத்துவ குழுவினர் தடுப்பூசி முகாமை ஒருங்கிணைத்தனர் ஊராட்சி தலைவர் வி.டி.எம் பவித்ராஅருண்நேரு தலைமை வகித்தார் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, விஏஓ பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது சுகந்தி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு பட்டுப்புடவையும் சரோஜா, வருண்பிரனேஷ், கார்த்திகேயன் ஆகியோருக்கு செல்போனும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை பரிசுகளாக மங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.எம் பவித்ராஅருண்காந்தி வழங்கினார்

Tags:    

Similar News