சிறுமிகளிடம் சில்மிஷம் ஊராட்சி செயலரை கைது செய்த போலீஸ்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமிகளிடம் தொடர் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-13 04:00 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியததை சேர்ந்த பல்லபுரம் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர்(53). இவர் இதே பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் பெட்டிக் கடையையும் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மதியம் அந்த கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமியும், 6 வயது சிறுமியும் மிட்டாய்கள் வாங்க சந்திரசேகரின் பெட்டிக்க டைக்கு வந்தனர். அங்கு அந்த சிறுமிகளிடமும் மிட் டாய் கொடுத்து ஆசை வார்த்தை கூறி கடைக்குள்.அழைத்துவச் சென்றார் ஊராட்சி செயலாளர். பின்னர் அவர், 2 சிறுமிகளிடமும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

சிறுமிகள் இருவரும் வலிதாங்காமல் அழுதுள்ளனர். இதற்கிடையே குழந்தைகளை நீண்ட நேரம் காணாத பெற்றோர், அவர் களை தேடி கடைக்கு வந்தனர்.

அப்போது, அழுது கொண்டிருந்த குழந்தைகளை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து சிறுமிகள் நடந்த விவரங்களை தங்கள் பெற்றோரிடம் கூறினர்.

இதைத்தொடர்ந்து 2 சிறுமிகளையும் அவர்களின் பெற்றோர் சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். மேலும் இதுகுறித்து லால்கு அனைத்த மகளிர் போலீசிலும் புகார் செய்தனர். இதனையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஊராட்சி செயலாளர் சந்திசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

Tags:    

Similar News