பிளஸ்- 2 மாணவி கர்ப்பத்திற்கு காரணமான பெயிண்டர் போக்சோவில் கைது
லால்குடி அருகே 'பிளஸ்- 2’ மாணவி கர்ப்பத்திற்கு காரணமான பெயிண்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு கடந்த 13-ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் லால்குடி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியும், லால்குடி அருகே கீழ்மாரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் மகன் பெயிண்ட்டிங் வேலை பார்க்கும் மணிகண்டன் (வயது 23) என்பவரும் காதலித்ததும் நெருங்கி பழகியதும் தெரியவந்தது.
இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து லால்குடி சிறையில் அடைத்தனர்.