லால்குடி அருகே அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் சந்தன கூடு விழா
லால்குடி அருகே சிறுதையூரில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் சந்தன கூடு விழா நாளை மறு நாள் நடைபெற உள்ளது.;
சிறுதையூரில் உள்ள ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா
லால்குடி அருகே சிறுதையூரில் ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடுவிழா நாளை நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுதையூர் பஸ் நிலையம் அருகே அடங்கியிருக்கும் மகான் ஹஜ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியாவின் சந்தனக்கூடு உரூஸ் விழா வருஷம் ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதம் பிறை 15 06-05-2023 சனிக்கிழமை இரவு நடைபெற உள்ளது. இந்த விழாவில் அனைத்து சமுதாயத்தினரும் இத்தளத்திற்கு வருகை தந்து பாத்திஹா மற்றும் நற்காரியங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
சந்தனக்கூடு ஊர்வலம் லால்குடி மேல வீதி ஆஷர் கானாவில் இருந்து ஆரம்பித்து திருச்சி சிறுதையூர் ரோட்டில் உள்ள தர்காவை அடைந்து ஹஜ்ரத் ரவுலா ஷரீப்புக்கு சந்தனம் பூசப்படும். அன்று இரவு தர்காவில்மவுலூது ஷரீஃப் ஓதப்படும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பாக அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .07-05-23 ஞாயிற்றுக்கிழமை அன்று தர்காவில் விளக்குகளின் அலங்காரம் மற்றும் பாத்திஹா நடைபெறும். 8.5.23 திங்கட்கிழமை பீர்னி பாத்திஹா நடைபெறும்.
இந்த சந்தனக்கூடு விழாவை லால்குடி முஸ்லிம் தர்மா பரிபாலன ஸ்தாபனம் மற்றும் ஜமாத்தார்கள் ஜாமியா பள்ளிவாசல் மற்றும் தர்கா நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.