கலெக்டர் அலுவலகம் முன் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-07 04:09 GMT

திருச்சியில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் காலம் காலமாக மாட்டுவண்டியில் மணல் அள்ளும் முறையை மாற்றக்கூடாது. மாட்டுவண்டியில் மணல் அள்ள பர்மிட்டுக்கு ரூ224ஐ விட கூடுதல் தொகையை வசூலிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக மாட்டுவண்டி மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. திருச்சி மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம், திருச்சி மலைக்கோட்டை வட்டார டயர் மணல் மாட்டுவண்டி சங்கம் மற்றும் திருச்சி விவசாயிகள் மணல் மாட்டுவண்டி சங்கம் சார்பில்  மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மணல் மாட்டுவண்டி சங்க மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி ரெங்கராஜன், மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் மணல் மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் மாணிக்கம், குணா, மணிகண்டன், உறையூர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News