லால்குடி பகுதியில் தொடர் திருட்டால் அச்சத்தில் பொது மக்கள்
Today Crime News in Tamil -லால்குடி பகுதியில் தொடர் திருட்டால் அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.;
Today Crime News in Tamil -திருச்சி மாவட்டம் லால்குடி, மாந்துறை, காட்டூர், சாத்தமங்கலம், அன்பில் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டுக்கள் அரங்கேறி வருகிறது. அதுவும் பகல் நேரத்தில் திருட்டுக்கள் நடைபெறுவது தொடர்கதை ஆகிவிட்டது. அதேபோல் லால்குடியில் வடநாட்டு வியாபாரிகளின் ஆதிக்கம் பெருத்து காணப்படுகிறது.
இவர்கள் லால்குடியை சுற்றி அதிகமான இடங்களில் தங்கி உள்ளார்கள். பகல் நேரங்களில் வயல்வெளிகளில் உள்ள மோட்டார் மற்றும் கோவில்கள் வீடுகள் என்று அனைத்து இடங்களிலும் நோட்டமிட்டு செல்கின்றனர். அதேபோல் கடந்த சில நாட்களாக மாந்துறையை சுற்றி வீடுகளில் தொடர் நடந்து உள்ளது. போலீசாருக்கு தகவல் கொடுத்தாலும் அல்லது புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.
நீங்கள் உங்கள் வீட்டில் கேமரா வைத்துக் கொள்ளுங்கள் அல்லது திருடியவர்களை எங்களிடம் காட்டுங்கள் என்று போலீசாரின் தரப்பில் பதில் வருகிறது. இதனால் பொருட்களை இழந்தவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் .ஆடு திருட்டுக்கள் இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது. பகல் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் சாலையில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை திருடிக் கொண்டு செல்கின்றனர்.
இந்தத் தொடர் திருட்டுக்களை தடுப்பதற்காகவும் திருட்டில் சம்பந்தப்பட்ட நபர்களை கடுமையான தண்டனை தருவதற்காகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனி கவனம் செலுத்தி தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சில நாட்களாக கஞ்சா விற்பனை ஆட்டம் போடுகிறது. பகல் வேளையில் அனைத்து இடங்களிலும் விற்பனை படுஜோராக இருக்கிறது என்று பொதுமக்கள் மிகவும் வேதனை படுகின்றனர் காலை வேளைகளில் மதுபான விற்பனை தாராளமயமாக நடக்கிறது. இதனால் பல குடும்பங்கள் சீரழிகிறது. இந்த திருட்டுக்கள் நடைபெறாமல் தடுத்து போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களை போலீஸ் தடுத்து நிறுத்துமா அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு களம் இறங்கி லால்குடியில் உள்ள போலீசாரை களையெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் லால்குடி பகுதி பொதுமக்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2