லால்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

லால்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-12-27 18:55 GMT
லால்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய விளையாட்டும் ஆகும். தை மாதம் பிறந்து விட்டாலே தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்ட தொடங்கி விடும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தொடங்கி திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் தை பிறக்க போவதால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளும் இப்போதே தொடங்கிவிட்டது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி என்பது முக்கியமான ஒன்று என்பதால் அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வருகிற பிப்ரவரி மாதம் நான்காம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த லால்குடி ஜல்லிக்கட்டு விழா குழு சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனையொட்டி தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு துணைத்தலைவர் காத்தான் பிள்ளை தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் கங்கா ,மாநிலச் செயலாளர் தக்காளி சிவா ,மாநில பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் மார்க்கெட் அசோக் ,பால்மாறன் ,வி ஆர் எம் வினோத் ,வீரபாஸ்கர் ,ஆழ்வார் ,துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன் மற்றும் பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

Tags:    

Similar News