லால்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லால்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் ரோட்டில், சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பதாக லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது, ஒருவர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் (வயது 62) என்பது தெரியவந்தது. பின்னர், அவர் மீது வழக்குபதிவு செய்த லால்குடி போலீசார், அவரை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.