லால்குடி: சூறைக்காற்றில் சாய்ந்த வாழைமரங்களால் விவசாயிகள் வேதனை

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழைமரங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.;

Update: 2022-05-05 12:16 GMT

லால்குடி பகுதியில் சாய்ந்து விழுந்துள்ள வாழை மரங்கள்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை திடீர் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அக்னி நட்சத்திர கோடை வெயிலின் தாக்கத்தினால் அனலில் இட்ட புழு போல் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை சற்று இதமாக இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் இந்த மழை விவசாயிகளுக்கு பலத்த சோதனையை ஏற்படுத்தி உள்ளது. பலத்த மழையுடன் வீசிய சூறைக்காற்றினால் திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள வாழை மரங்கள் சாய்ந்து முறிந்து விழுந்துள்ளன. முசிறி, தொட்டியம், ஜீயபுரம், லால்குடி பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பது விவசாயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தி  இருக்கிறது.

Tags:    

Similar News