லால்குடி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் வழங்கல்
லால்குடியில் எம்எல்ஏ சௌந்திரபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.;
திருச்சி மாவட்டம் லால்குடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் 2 சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ 1,38 லட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.
அருகில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் செளந்திபாண்டியன், லால்குடி ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.