திருச்சியில் 24 குரங்குகள் ஒரே இடத்தில் சாவு: வனத்துறையினர் விசாரணை

திருச்சியில் 24 குரங்குகள் ஒரே இடத்தில் மரணமடைந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2022-01-23 14:00 GMT

திருச்சி அருகே மர்மமான முறையில் இறந்து கிடக்கும் குரங்குகள் 

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சிறுகனூர் அடுத்துள்ள நெடுங்கூர் அருகே 24 குரங்குகள் மர்மமான முறையில் ஒரே இடத்தில் அருகருகே செத்து கிடந்தன. இதில் 6 பெண் குரங்குகளும், 18 ஆண் குரங்குகளும் என மொத்தம் 24 குரங்குகள் செத்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் செத்து கிடந்த குரங்குகளின் உடல்களை கைப்பற்றி விலங்கு மருத்துவர்களை கொண்டு உடற்கூறு ஆய்வு நடத்தி உள்ளனர்.

இந்த குரங்குகள் விஷ பழங்களை தின்றதால் செத்தனவா? அல்லது யாரேனும் விஷம் வைத்து கொன்றுள்ளார்களா? அவ்வாறு கொன்றது யார்? என்பது குறித்து போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News