தி.மு.க. அரசை கண்டித்து 22-ம் தேதி லால்குடியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து 22-ம் தேதி லால்குடியில் திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.;

Update: 2022-01-20 11:32 GMT

திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார்.

திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் லால்குடி தாலுகா அலுவலகம் முன் நாளை மறு நாள் ஜனவரி 22ம் தேதி காலை 10.35 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பருவம் தவறிய பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், உரிய நேரத்தில் நிவாரணம் வழங்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் நடைபெற உள்ள இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி ப. குமார் தலைமை தாங்குகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, அம்மா பேரவை, இலக்கிய அணி, அமைப்பு சாரா அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் அணி, சிறுபான்மையினர் நல பிரிவு, மீனவர்,வர்த்தகர், கலைப்பிரிவு, தகவல் தொழில்  நுட்ப பிரிவு, உள்ளாட்சி,கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அணியினர், கழக செயல்வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி மாவட்ட செயலாளர் ப குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News