திருச்சி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட 90 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

திருச்சி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட 90 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-11-19 11:28 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் .ரமேஷ்பாபுக்கு பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரையடுத்து திருச்சி கீழவாளாடி பகுதியில் உள்ள ஒரு கடையிலும் அதனை ஒட்டிய அவரது வீட்டிலும் சுமார் 60 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் , மேலவாளாடியில் உள்ள ஒரு கடையில் 1 4 கிலோவும் பறிமுதல் செய்து அதே இடத்தில் ரூ. 5000  அபராதம் விதிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ஒரு கடையிலும்  வீட்டிலும் சுமார் 30 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது . மூன்று கடைகளையும் சேர்த்து மொத்தம் சுமார் 90 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது . இரண்டு இடங்களிலும் வழக்கு தொடுப்பதற்காக 7 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு கூறுகையில்

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை தர நிர்ணய சட்டம் 2006 – ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .

மேலும் இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்  , தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புகார் எண்கள் : 9585959595 – 9944959595  9444042322

இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புச்செல்வன், வடிவேல், பொன்ராஜ், இப்ராஹிம் மற்றும் வசந்தன் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தனர் .

Tags:    

Similar News