திருச்சி அருகே சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 9 பேர் கைது

திருச்சி அருகே சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-18 08:07 GMT

தாக்கப்பட்ட சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் கிராமத்தில் முழு ஊரடங்கு தினமான நேற்று முன்தினம் அனுமதியின்றி சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில், கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஜல்லிக்கட்டை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், போட்டியாளர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தாக்கப்பட்டார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கல்லக்குடி போலீசார் கீழரசூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிராஜ் (வயது 25), நல்லுசாமி(65), ராஜேந்திரன் (60), மணி (34), ராஜா (28), ராமசுந்தரம் (62), ரமேஷ்(30), விக்னேஷ்குமார் (28), கல்லகம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (19) ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போலீசாரை தாக்கியது, பொது ஊரடங்கு தடையை மீறியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News