முன்னாள் அமைச்சருடைய அண்ணன் வீட்டில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செய்த சோதனையில் 1 கிலோ தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமார் வீட்டில் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உதயகுமார் வீட்டில் இருந்து ரூ.1,06,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் காலையில் கைப்பற்றினர்.
உதயகுமாரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவரை போலீஸ் இலுப்பூருக்கு அழைத்து சென்று விசாரித்து வருகிறது. உதயகுமாருடன் தொடர்பில் உள்ள ஒப்பந்ததாரர் தர்மலிங்கம் என்பவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். பல்வேறு இடங்களை வாங்கி கொடுத்த தரகராக தர்மலிங்கம் செயல்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.