வணிகர்களுக்கு ஊரடங்கு நெறிமுறைகள் குறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி விளக்கம்

முழு ஊரடங்கு காலத்தில் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் விளக்கம்.

Update: 2021-05-09 14:51 GMT

விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ளபடி முழு ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விளக்கமளித்தார்.

நாளை 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் உள்ள காவல் ஆய்வாளர்கள், அனைத்து வணிகர் சங்கங்கள், ஓட்டுனர் சங்கங்கள், காய்கறி வியாபாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் வியாபாரிகள் அனைவருக்கும் முழு ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags:    

Similar News