போதையில் தினமும் தகராறு: கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்ற மனைவி கைது

விளாத்திகுளம் அருகே போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-11-09 13:01 GMT

கைது செய்யப்பட்ட இந்திரா.

தூத்துக்கு மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள எட்டயபுரம் தாலுகா மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகையா மகன் மாடசாமி(32). இவரது மனைவி இந்திரா(28). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களாகிறது. இவர்களுக்கு வைத்திஷினி(12) மற்றும் முகாசினி(8) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குடிப்பழக்கம் காரணமாக மாடசாமி கடந்த சில மாதங்களாக இந்திராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. . இந்நிலையில் இந்திரா விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தினை உணவில் கலந்து மாடசாமிக்கு கொடுத்துள்ளார்.

உணவில் களைக்கொல்லி மருந்து வாசம் வருவதை உணர்ந்த மாடசாமி அருகிலிருந்தவர்களிடம் உணவை காட்டிய போது உணவில் விஷ மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் சோப்பு நுரையை கலக்கி மாடசாமிக்கு கொடுத்து முதலுதவி செய்து சிகிச்சைக்காக எட்டயாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் மாடசாமி மனைவி இந்திராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News