தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை-15 இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் , காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்களின் விபரங்கள்:

Update: 2021-07-15 00:36 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை-15 நாளை கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 14.07.2021 முடிய மொத்தம் 6,588 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 15.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, அரசு பொது மருத்துவனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவனை - காயல்பட்டினம், அரசு பொது மருத்துவனை - கோவில்பட்டி ஆகிய இடங்களிலும், காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் - மாதாநாகர், எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்புலி, கணபதி சமுத்திரம், மாதவன்குறிச்சி, ரத்தினபுரி, நாலுமாவடி, விஜயராமபுரம், நகராட்சி அலுவலகம் - கோவில்பட்டி, ராஜா மேல்நிலைப்பள்ளி - எட்டையாபுரம், நகர்நல மையம் - ஸ்ரீராம்நகர், ஆரம்ப சுகாதார நிலையம் - இளையரசனேந்தல், அங்கன்வாடி மையம் - பெரியநத்தம், அங்கன்வாடி மையம் - சுப்பிரமணியபுரம், அங்கன்வாடி மையம் - கீழ அரசடி, அங்கன்வாடி மையம் - துப்பாஸ்பட்டி, அங்கன்வாடி மையம் - அய்யனார்புரம், அங்கன்வாடி மையம் - வெள்ளைப்பட்டி, சத்துணவு மையம் - குமாரகிரி, சத்துணவு மையம் - வடக்கு இலந்தைகுளம், துணை சுகாதார நிலையம் - சிதம்பரபுரம் , சத்துணவு மையம் - திருமலாபுரம், நொச்சிக்குளம், சத்துணவு மையம் - கே.வேலாயுதபுரம், சத்துணவு மையம் - காட்டாரங்குளம், சரவணாபுரம், கலைஞர் கிளினிக் - விளாத்திகுளம், சமுதாய நலக்கூடம் - சொக்கலிங்கபுரம், சமுதாய நலக்கூடம் - குமரெட்டியாபுரம், சமுதாய நலக்கூடம் - சுப்பிரமணியபுரம், சமுதாய நலக்கூடம் - பி.சண்முகபுரம், சமுதாய நலக்கூடம் - ஏ.வேலாயுதபுரம், இ-சேவை மையம் - கீழகரந்தை, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - அழகாபுரி, அங்கன்வாடி மையம் - மாவிலோடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News