தூத்துக்குடியில் சத்துணவு & அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலுகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய விதிகளின்படி குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850/ வழங்கிட வேண்டியும், சமூகநல ஆணையரின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி ஓய்வூதிய பணபலன்கள் உள்ளிட்ட நிலுவைகளை காலதாமதமின்றி வழங்கிட வலியுறுத்தி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் உத்தண்ட ராமன், மாநில துணைத்தலைவர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய விதிகளின்படி ரூ.7850 வழங்கிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாநில துணைத்தலைவர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் கூறுகையில், தமிழக சட்ட மன்றத்தில் நடைபெறும் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை தினமான இன்று தூத்துக்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய விதிகளின்படி ரூ.7850 வழங்கிட வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். தற்போது தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.