ஏரலில் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2021-04-18 05:15 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தாம்போதி பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போதெல்லாம் அந்த பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அங்கு புதிய மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள், ஏரல் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதை ஏற்று அரசு சார்பில் ரூ.17 கோடியில் அங்கு புதிய மேல்மட்ட பாலம் 2016-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

தற்போது அந்த பாலத்தில் தூண்களுக்கு இடையே உள்ள இணைப்பு பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து ஓட்டை விழுந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு செல்கின்றனர்.அந்த வழியாக வாகனங்கள் செல்ல, செல்ல ஓட்டை பெரிதாகி கொண்டே செல்கிறது. எனவே சேதமடைந்த அந்த பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News