தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேருந்து நிலையம் முன்பு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை எஸ்பி.,ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
குற்ற செயல்களை தடுக்கும் வண்ணம் வீடுகளிலும், முக்கியமாக வியாபாரிகள் தங்கள் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம் பேருந்து நிலையம் முன்பு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்பி.,ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியின் போது சாத்தான்குளம் வட்டாட்சியர் லட்சுமி கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் துரைராஜ் மற்றும் சாத்தான்குளம் கல்வி கழகச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.சாத்தான்குளம் டிஎஸ்பி., காட்வின் ஜெகதீஷ் குமார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர், சப்இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்