திருத்துறைப்பூண்டியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்: வீடு எரிந்து சேதம்
திருத்துறைப்பூண்டியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்.;
திருத்துறைப்பூண்டி பதினோராவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் ராமலோகேஸ்வரி வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 11வது வார்டுக்கு உட்பட்ட பாமனி ரோடு மீனாட்சி வாய்க்கால் பகுதியை சேர்ந்த பானுமதி என்பவரின் கூரை வீட்டில் பட்டாசு பட்டு தீப்பிடித்தது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இருந்தபோதும் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.