ஒமிக்ரான் வைரஸ் எதிராெலி: தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.;

Update: 2021-12-24 12:04 GMT

தேனி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஒமிக்ரான் பரவல் வந்தாலும் எதிர்கொள்ள மருத்துவ, சுகாதாரத்துறைகள் தயாராகி வருகின்றன.

தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதத்தில் ஒரு சில நாட்களே கொரோனா பெருந்தொற்று பதிவாகி உள்ளது. அதுவும் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் மட்டுமே பதிவாகி உள்ளது. இன்று தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 600 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதிப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மதுரை வரை எட்டி விட்ட நிலையில், தேனி மாவட்டத்திற்குள்ளும் விரைவில் புகுந்து விடும் என சுகாதாரத்துறை எதிர்பார்த்துள்ளது. அப்படி ஒமிக்ரான் தொற்று பதிவானாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனாவிற்கு பயன்படுத்தப்பட்ட 600 படுக்கைகளும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். தேவைப்பட்டால் மாவட்டம் முழுவதும் சிகிச்சை மையங்களை திறக்கவும் தயாராக உள்ளதாகவும், அரசின் வழிகாட்டுதல்களை முழு அளவில் பின்பற்றி வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News