பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த வேப்பத்தூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள்
வேப்பத்தூர் பேரூராட்சியில் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சியில் கல்யாணபுரம் கடைவீதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மலர்கள் சுய உதவிக்குழுவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திருமங்கலகுடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தவறவிட்ட 29,720 ரூபாய் மற்றும் 2 செல்போன்களையும் தூய்மைப் பணியாளர் ஆரோக்கிய பிச்சை மற்றும் ஓட்டுனர் தினகரன் ஆகியோர் கண்டெடுத்தனர்.
இதனை வேப்பத்தூர் பேரூராட்சி பெருந்தலைவர் அஞ்சம்மாள், செயல் அலுவலர் லதா. இளநிலை உதவியாளர் ரமேஷ் குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். தூய்மை பணியாளர்களை பாராட்டி நிர்வாகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.