திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 37 இடங்களில் காய்கறி தோட்டம்: அலுவலர்கள் ஆய்வு
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ரூ 15,000 திட்ட மதிப்பீட்டில் 37 இடங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.;
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 37 இடங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் தோட்டத்த்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ரூ 15,000 திட்ட மதிப்பீட்டில் 37 இடங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி தோட்டத்தில் கீரை வகைகள், பப்பாளி, கருவேப்பிலை போன்ற பயிர்கள் முன்னுரிமை அடிப்படையில் பயிரிப்படுகிறது. பயிரிடப்பட்ட கீரை வகைகளை ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு சத்துணவு உணவுடன் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிரிடப்பட்ட கீரை வகைகளை கண்காணிக்க, இரண்டு பணியாளர்களை நியமனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், குறிச்சி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தை, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சிவகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.