கும்பகோணம் அருகே உள்ள சிவசூரிய பெருமானுக்கு திருக்கல்யாணம்
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் அறிவுறுத்தலின் பேரில், கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
கும்பகோணம் அருகே உள்ளகும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலில் சாயாதேவி உஷாதேவி சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்களுக்கு தலைவராக அருள்பாலிக்கும் சிவசூரிய பெருமானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி பெருவிழாவில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் அறிவுறுத்தலின் பேரில், இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 30 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக திருமங்கலக்குடியில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்தனர். ஆலய வாசலில் உஷா தேவி சாயா தேவி உடனாய சிவபெருமான் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பி.கி. காளிமுத்து ராஜமுநேந்திரர் குடும்பத்தினர் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து இருந்தனர்.