திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கம்

திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கம்

Update: 2021-12-01 13:00 GMT

திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காட்சியில் தொடங்கப்பட்டது.

இவ்விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா சரவணன் குத்துவிளக்கேற்றி வாழ்த்துரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கைலாசம் வரவேற்றார். லயன்ஸ் கிளப் மண்டல அமைப்பாளர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் லாடமுத்து மற்றும் உதவி ஆசிரியர்கள் விஜயராணி, பத்மாவதி, மாலா, வசுமதி, ஜனனி, பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திட்ட தொடக்க விழா ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் சுகன்யா, லாவண்யா, ரோஸ்லின் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News