திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் தைப்பூச விழா தொடக்கம்

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2022-01-09 16:15 GMT

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன்  தைப்பூச விழா 

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. இந்த கோயிலில் தைப்பூசத் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூசத் பெருவிழாவை முன்னிட்டு திக்குத் திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் சூரிய பிரபைழ சந்திர பிரபை வாகனத்திலும், மூன்றாம் நாள் பூதம் பூதகி வாகனங்களிலும், நான்காம் நாள் யானை, சிம்ம வாகனத்திலும், ஐந்தாம் நாள் சகோபுரம் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஆறாம் நாள் காமதேனு, கற்பக விருட்சம் வாகனங்களிலும், ஏழாம் நாள் கயிலாய வாகனம், அன்னபட்சி வாகனத்திலும், எட்டாம் நாள் காலை பல்லக்கிலும், இரவு குதிரை, கிளி வாகனங்களில் மகாலிங்க சுவாமி காட்சியளிக்கிறார்.

ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. பத்தாம் நாள் திருவிழாவாக தைப்பூச தீர்த்தவாரி பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரி ஆற்றில் எழுந்தருளி தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு வெள்ளி ரதக் காட்சி நடைபெறுகிறது. தைப்பூசவிழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News