திருவிடைமருதூர் நீதிமன்ற லோக் அதாலத் விசாரணையில் 104 வழக்குகளுக்கு தீர்வு

திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் 104 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது;

Update: 2022-03-13 02:00 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  தேசிய மக்கள் நீதிமன்றம்  (லோக் அதாலத்) விசாரணை நடைபெற்றது.

நீதித்துறை நடுவர் நிலவரசன் தலைமை வகித்தார். லோக் அதாலத்தில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்கப்பட்டன. பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. 183 வழக்குகள் எடுக்கப்பட்டது. இதில் 104 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News