திருப்பனந்தாளில் அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருப்பனந்தாளில் அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2022-05-08 23:30 GMT

திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் விஜயபாலன் தலைமையில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

திருப்பனந்தாள் வடக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்,  தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜயபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, அமைப்புச் செயலாளர் மனோகரன், திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக, துணை பொதுச் செயலாளரும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான எம். ரங்கசாமி கலந்து கொண்டு பந்தநல்லூர் திருப்பனந்தாள் ஆகிய பகுதிகளில் கொடியேற்றி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,  ஒன்றிய அவைத்தலைவர் அரங்கன், பேரூர் செயலாளர் பூக்கடை ராஜி, மாவட்ட பிரிவு செயலாளர் முருகானந்தம், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சின்னதுரை, முன்னாள் பேரூர் கழக செயலாளர் சேட்டு என்கிற காஜா நிஜாமுதீன், ஊராட்சி கழகச் செயலாளர்கள் ரவி, தியாகராஜன், சேகர், சூரியமூர்த்தி, விஜயராஜ் மற்றும் ராஜராஜன், சுபாஷ், ரஜினி,, பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News