ஆடுதுறை விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.;
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை வீரசோழன் ஆற்றுப்பாலம் அருகில், விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பழமையானதும், புராண சிறப்புகள் பெற்றதுமான விஸ்வநாத சுவாமி கோயில் திருப்பணி பல லட்சம் மதிப்பில் நடைபெற்று வந்தது.
கடந்த 4ஆம் தேதி மாலை, யாகசாலை பூஜையுடன், முதல் கால பூஜைகள் தொடங்கின. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மங்கல வாத்திய இசையுடன் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. நேற்று காலை, 10.30 மணிக்கு ஆலய விமான கும்பாபிஷேகமும் தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், ஆடுதுறை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, விசுவநாதர் விசாலாட்சியை தரிசனம் செய்தனர்.