எஸ்டிபிஐ கட்சியின் திருவிடைமருதூர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்
SDPI Party - எஸ்டிபிஐ கட்சியின் திருவிடைமருதூர் தொகுதி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
SDPI Party - தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, எஸ்டிபிஐ கட்சியின் திருவிடைமருதூர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் அரசியல் பயிலரங்கம் திருபுவனத்தில் தொகுதி தலைவர் ஜவஹர் அலி தலைமையில் நடைபெற்றது. சமகால அரசியல் சூழல் குறித்து தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது பாருக் எழுச்சி உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் JBR ரியாஸ், SDTU தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆசாத் அலி, WIM மாவட்ட தலைவி ஆமினா, தொகுதி துணை தலைவர் சாகுல் ஹமீது, கும்பகோணம் நகர செயலாளர் அப்துல்லா, திருபுவனம் விவசாயக் கூட்டமைப்பு தலைவர் முகம்மது, தொகுதி செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரீப், சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் முகம்மது அணஸ், கிளைத் தலைவர் ஹஜ் முஹம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2