திருவிடைமருதூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.;

Update: 2022-03-28 07:00 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர். 

திருவிடைமருதூரில் மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 48 மணிநேர பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று நடந்த  போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார்.

திருவிடைமருதூர் கடைத்தெருவில் இருந்து ஊர்வலமாக சென்று திருவிடைமருதூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மணல் மாட்டுவண்டி சங்கம் கோவிந்தராஜ், கூட்டுறவு ஊழியர் சங்கம் சேகர், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சுகுமார், கைத்தறி நெசவாளர் பிரிவு சேது, ஐஎன்டிசியு நிர்வாகி துளசிராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் போராட்டத்தில் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, விசிக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டது. இந்த மறியலை முன்னிட்டு திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 52 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News