திருவிடைமருதூரில் பா.ம.க. சார்பில் மக்களைத் தேடி கிராம கூட்டம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பா.ம.க. சார்பில் மக்களைத் தேடி கிராம கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-15 12:48 GMT

திருவிடை மருதூரில் பா.ம.க. சார்பில் மக்களை தேடி கிராம கூட்டம் நடந்தது.

தஞ்சை வடக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி திருவிடைமருதூர் மேற்கு ஒன்றியத்தில், வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மல்லபுரம் ஜோதிராஜ், மேற்கு ஒன்றியத்தில் கூகூர் கிளையில், மக்களைத் தேடி கிராம கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் வன்னியர் சங்க பொருளாளர் தியாக பக்கிரிசாமி, மாவட்ட உழவர் பேரியக்கம் தலைவர் கருணாகரன் தேவர், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபி, ஒன்றிய துணை செயலாளர் பாலாஜி, வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் சிவா, திருநறையூர் கிளை செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News