ஆடுதுறையில் டிடிவி தினகரன் பிறந்த நாளை கொண்டாடிய புதுமணத் தம்பதிகள்
ஆடுதுறையில் டிடிவி தினகரன் பிறந்த நாளை கொண்டாடிய புதுமணத் தம்பதிகள்;
அமமுக திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜசேகர் தலைமையில் ஆடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு புதுமண தம்பதிகள் ஸ்வேதா குருமூர்த்தி கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் மனோகரன், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெகன், ஒன்றிய அவைத்தலைவர் நிஜாம், ஒன்றிய இணைத்தலைவர் ராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகம், திருவிசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பூமிநாதன், பேரூர் கழக செயலாளர்கள் மதியழகன், சுப்பிரமணியன், ரவி, காமேஷ், ஒன்றிய பிரிவு நிர்வாகிகள் உமா, அருண், கார்த்திகேயன், மணிமாறன், ஊராட்சி செயலாளர்கள் மோகன்தாஸ், சரவணன், பேரூர் கழக நிர்வாகிகள் குமரன், பெரியதம்பி, எடிசன், கார்த்திக், கிளை செயலாளர் பட்டுசாமி, கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.