திருவிடைமருதூர் அருகே பணத் தகராறில் முதியவர் கொலை - ஒருவர் கைது

திருவிடைமருதூர் அருகே பணத் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-02 04:30 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவில் சன்னாபுரம் வடக்கு வீதியை சேர்ந்த கணேசன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் திருமணத்திற்கு பாத்திரக்கடையில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 80 ஆயிரத்திற்கு பாத்திரங்கள் கடனாக வாங்கிக் கொடுத்துள்ளார். அதில் ரூ. 20000 பாக்கி இருந்ததால் நேற்று இரவு கணேசன் ராஜேந்திரனை பார்த்து பாத்திரகடை பாக்கியை உடனடியாக கொடு என்று கூறியுள்ளார். எனக்கு கொடுக்க தெரியும் என்று கணேசனிடம் ராஜேந்திரன் பேசியதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன்,  கணேசனை கீழே தள்ளியுள்ளார். மயக்கமடைந்த கணேசனை உடனடியாக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி விட்டனர். இதுபற்றி திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கொலை செய்த ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News