கும்பகோணத்தில் சிறுமி உள்ளிட்ட 5 பேருடன் திருமணம்; மதுரையைச் சேர்ந்தவர் கைது

கும்பகோணத்தில் சிறுமி உள்ளிட்ட ஐந்து பேரை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-18 16:10 GMT

கைது செய்யப்பட்ட சையத் அலி.

மதுரையை சேர்ந்த சையத் அலி என்பவர், சில மாதங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே கடையில் வேலை செய்த  17 வயது சிறுமியை திருமணம் செய்து வெளியூர் அழைத்து சென்று விட்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில், நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அந்த சிறுமியுடன் சையத் அலி இன்று நாச்சியார் கோயிலுக்கு வந்தார். உடனடியாக அங்கு வந்த  நாச்சியார்கோவில் போலீசார், சையத் அலியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் சையத் அலி ஏற்கனவே நான்கு பெண்களை திருமணம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News