ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவராக ம.க.ஸ்டாலின் பதவியேற்பு
திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவராக ம.க.ஸ்டாலின் பதவியேற்றார்.;
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவின்பேரில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியின்றி தலைவராக பாட்டாளி மக்கள் கட்சியின் ம.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கமலா சேகர் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற ம.க. ஸ்டாலின் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி. மணி இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். துணைத் தலைவராக கமலா சேகர் பதவியேற்றுக் கொண்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேரூராட்சி மன்றத் தலைவர் ம.க.ஸ்டாலின் ஆடுதுறையில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி. மணிக்கு மணி மண்டபம் கட்டப்படும். ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் இலவச குடிநீர் வழங்கப்படும். ஆடுதுறை பேரூராட்சி கொசு இல்லாத நகரமாக உருவாக்கப்படும். ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவமனையாக மாற்றப்படும். அதேபோல மருத்துவக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றார்.