திருவிடைமருதூரில் லாரிக்கு வழிவிட்டதால் நடந்த விபரீதம்; பெண் உயிரிழந்த பரிதாபம்
திருவிடைமருதூரில் லாரிக்கு வழிவிட்டதால், இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;
தஞ்சாவூர் மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் சேர்ந்தவர் லதா வயது 53 இவர் தனது மகன் பிரவீன் குமாருடன் இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து கீழப்பெரும்பள்ளம் பகுதிலிருந்து வேப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரிக்கு வழி விடும்போது, வழுக்கி விழுந்து லதா சம்பவ இடத்திலேயே இறந்தார் மகன் பிரவீன் குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.