தனியார் துறை வேலைவாய்ப்பு பற்றி விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கம்

ஆடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.;

Update: 2022-04-05 13:30 GMT
வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை அஸ்ஸலாம் கல்லூரியில் வருகிற 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி. செழியன் முன்னேற்பாட்டில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தலைமையில் அஸ்ஸலாம் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன், வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வீரராகவன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கல்லூரியின் தலைவர் ஜமால் முகமது இப்ராஹிம், செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், துணைத்தலைவர் முகம்மது உசேன், இணைச்செயலாளர் சிராஜ்தீன், கல்லூரி முதல்வர் டாக்டர் ராம்குமார், நிர்வாக அலுவலர் உதயகுமார், தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, அம்பிகாபதி, அசோக்குமார், கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் பிரச்சார வாகனமும் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News