ஆடுதுறை பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்
ஆடுதுறை பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளதுவிவரம்;
ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியலை ஆடுதுறை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கருப்பையன் ஜெயசங்கர் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர் ஆடுதுறை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு,
1-வது வார்டு மஞ்சுளா (ம.தி.மு.க.) முத்துபீவிசா (பா.ம.க.) மற்றும் சுயேட்சைகள் 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.
2-வது வார்டு குமார் (அ.தி.மு.க.) மீனாட்சி (தி.மு.க.) மேகநாதன் (அ.ம.மு.க) ராசாங்கம் (நாம் தமிழர்) ராஜகோபால் (பா.ம.க.) ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர்.
3-வது வார்டு சரவணன் (ம.தி.மு.க.) சரவணநாராயணசாமி (அ.ம.மு.க.) ஜெயக்குமார் (அ.தி.மு.க.) ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.
4-வது வார்டு சாந்தி (தி.மு.க.), கமலா (அ.தி.மு.க.), ஆனந்தி (தே.மு.தி.க.) ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.
5-வது வார்டு அபிராமி (காங்கிரஸ்) சுதா (அ.ம.மு.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 3 பேர் போட்டியிடுகின்றனர்.
6-வது வார்டு இளங்கோவன் (தி.மு.க.), வெங்கட்ராமன் (அ.தி.மு.க.) முருகன் (பா.ம.க.) கலீல் ரகுமான் (நாம்தமிழர்) ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.
7-வது வார்டு சுகந்தி (தி.மு.க.), இந்திரா (அ.தி.மு.க.), கிருஷ்ணவேணி (பா.ம.க.), மற்றும் சுயேட்சை 2 பேர் உள்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்.
8-வது வார்டு அந்தோணியம்மாள் (அ.தி.மு.க.), அஸ்மா நாச்சியா(சுயே), திருவளர்செல்வி (சுயே), பரமேஸ்வரி(சுயே) ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.
9-வது வார்டு அனுஷா (ம.தி.மு.க.), லட்சுமி (அ.தி.மு.க.), சாந்தி (பா.ம.க.) ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.
10-வது வார்டு ரகமத் துன்னிசா (அ.தி.மு.க.), சமீமாபேகம் (பா.ம.க.), மற்றும் சுயேட்சை 2 பேர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.
11-வது வார்டு ராமச்சந்திரன் (அ.தி.மு.க.), கண்ணன்(சுயே), மகாராஜன் (சுயே), மகேந்திரன்(சுயே), உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.
12-வது வார்டு இந்திரசேனன் (தி.மு.க.), ஸ்டாலின் (பா.ம.க.), காத்தவராயன்(அ.ம.மு.க) ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.
13-வது வார்டு ரவி (தி.மு.க.), ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.), பாலதண்டாயுதம் (பா.ம.க.) ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.
14-வது வார்டு மாலதி (தி.மு.க.), தனராணி (அ.தி.மு.க.), விஜயலட்சுமி (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.
15-வது வார்டு முத்தையன் (தி.மு.க.), குமார் (அ.தி.மு.க.), ராமு (பா.ம.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 15 வார்டுகளிலும் 57 பேர் போட்டியிடுகின்றனர்.