நீலப்புலிகள் இயக்கம் சார்பில் அம்பேத்கரின் மார்பளவு சிலை ஊர்வலம்
திருப்பனந்தாள் அருகே நீலப்புலிகள் இயக்கம் சார்பில் அம்பேத்கரின் மார்பளவு சிலை ஊர்வலம் நடைபெற்றது.;
சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாள் அரசு சார்பில் சமத்துவ விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் தத்துவாஞ்சேரியிலிருந்து அம்பேத்கர் ரத யாத்திரை முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருவாய்பாடியில் வைத்து அம்பேத்கர் சிலைக்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நீலப்புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன், பொதுச்செயலாளர் மணிசேகரன், மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ், அம்பேத்கர் ஆலோசனைக் குழுக்கள் காசிநாதன், ரவி, சீத்தாராமன், மாவட்ட தலைவர் காமராஜ், துணைத் தலைவர் மேகநாதன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், தொகுதி செயலாளர் முல்லைவளவன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா, புத்தகங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திருவாய்ப்பாடியில் அம்பேத்கர் வெண்கல சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.