கல்யாணபுரத்தில அறுந்து கீழே கிடந்த மின் வயர் பட்டு சிறுவன் பலி
கல்யாணபுரத்தில அறுந்து கீழே கிடந்த மின் வயர் பட்டு சிறுவன் பலி;
திருவிடைமருதூர் அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (எ) அசுரன் மகன் அகிலன் (13). அசுரன் தனது மகன் அகிலனை அப்பகுதியில் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிப்பதற்காக அட்மிஷன் போட்டு விட்டு வீட்டுக்கு வந்து உள்ளார்கள். பின்னர், அகிலன் வீட்டுக்கருகில் வயலில் புல் அறுப்பதற்காக சென்றபொழுது, அறுந்து கிடந்த மின் வயரில், எதிர்பாராத விதமாக பட்டதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரிடம், மூன்று நாட்களாக அறுந்து கிடந்த மின்கம்பியை மாற்றக் கோரி பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காத, மின்சார துறையினர் மற்றும் வேப்பத்தூர் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.