நாச்சியார்கோவிலில் கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

நாச்சியார்கோவில் ஊராட்சியில் கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபற்றது.;

Update: 2021-12-03 13:15 GMT
நாச்சியார் கோயில் ஊராட்சியில் நடந்த கள்ளச்சாராய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திருவிடைமருதூர் ஒன்றியம், நாச்சியார்கோவில் ஊராட்சி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் தீமைகளையும் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி காவிரித்தாய் கலைக் குழுவின் சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாச்சியார் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமாசங்கர் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் ரேகாராணி, கிராம நிர்வாக அலுவலர் சங்கர், ஊராட்சி செயலர் வரதராஜன், உதவியாளர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News