அமமுக கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்

திருவிடைமருதூர் தொகுதி அமமுக கூட்டணி வேட்பாளர் மனுதாக்கல்.;

Update: 2021-03-17 10:00 GMT

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று திருவிடைமருதூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி வேட்பாளர் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் மனோகரன் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News