அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டம்: பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மரியாதை

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், முதல்வருக்கு நன்றி தெரிவித்து நாச்சியார்கோவில் பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மரியாதை

Update: 2021-08-16 14:37 GMT

நாச்சியார்கோவிலில் பெரியார் சிலைக்கு மரியாதை செய்த அர்ச்சகர்கள் 

தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என உத்தரவிட்டதை அடுத்து, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலில் அனைத்து கட்சியினர் மற்றும் கிராம பூசாரிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து நாச்சியார் கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அனைத்து கட்சி பிரமுகர்கள் கிராம பூசாரிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், திராவிடர் கழக மண்டல செயலாளர் குருசாமி, நகர தலைவர் முத்துக்குமாரசாமி, ஒன்றிய செயலாளர் குணசேகரன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் சாக்கோட்டை இளங்கோவன், சோலை மாரியப்பன் வெங்கடேசன், திமுக ஊராட்சி செயலாளர் துரை பூபதி, ஊராட்சி மன்ற தலைவர் உமா சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ் முகமது, விசிக சோபு, இளங்கோவன், சங்கர், கிராமப்புற பூசாரிகள் சங்க உறுப்பினர்கள் பரமசிவம், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கொண்டனர்.




Tags:    

Similar News