பந்தநல்லூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவருக்கு நிதிஉதவி

பந்தநல்லூர் அருகே மருத்துவக்கல்லூரி மாணவருக்கு தலைமை கொறடா கோவி. செழியன் நிதிஉதவி வழங்கினார்.

Update: 2022-03-15 18:15 GMT

தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் மாணவரின் குடும்பத்திற்கு நேரில் சென்று மருத்துவ படிப்பை தொடர நிதி  உதவி வழங்கினார். 

திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் கருப்பூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் முருகன். மனநிலை சரியில்லாதவர். இவரது மனைவி பிரேமாவதி. கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இளைய மகன் பாலாஜி பந்தநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் 449 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்தார். தஞ்சாவூரில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்றார். மேலும் சேலத்தில் நீட் பயிற்சி என அவரது ஆசிரியர் லதா உதவியுடன் படிப்பை முடித்தார்.

இந்நிலையில் நீட் தேர்வில் 435 மதிப்பெண்கள் பெற்று நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு போதுமான பண வசதி இல்லாத நிலையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் மாணவரின் குடும்பத்திற்கு நேரில் சென்று மருத்துவ படிப்பை தொடரவும் படிப்பு முடியும் வரையிலான அனைத்து உதவிகளையும் தனது சொந்த நிதியைக் அளித்து மாணவனின் மருத்துவர் கனவை நிறைவேற்றினார்.

மேலும் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் அண்ணாதுரை, உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் லதா, முன்னாள் தலைமையாசிரியர் வீராசாமி, பந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு உட்பட பலர் மாணவன் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News